யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

Northern Province of Sri Lanka School Children Nagalingam Vedanayagam
By Thevanthan Jun 06, 2025 08:49 AM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், இந்த மாத இறுதிக்குள் கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (4) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது அவசியம் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினரும் கோரி வருகின்றனர்.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

மறுவாழ்வு நிலையம்

கிளிநொச்சி- கிருஸ்ணபுரத்தில் இதற்கான கட்டடம் எம்மால் அடையாளப்படுத்தப்பட்டபோதும் அது பொருத்தமானது அல்ல என அவர்கள் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். மாற்று இடத்தை உடனடியாக அடையாளப்படுத்தி வழங்க வேண்டியுள்ளது.

தற்போது அதிகளவு சிறுவர்களும் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை | Rehabilitation Center To Set Up In North

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகையில், 15 – 18 வரையிலான வயதுடைய 36 சிறுவர்கள் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி நீதிமன்றத்தால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிறுமிகளும் உள்ளடங்குகின்றனர்.

இதன்போது அச்சுவேலியில் சிறுவர் சான்றுபெற்ற பாடசாலைக்கு அண்மையாகவுள்ள வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டடத்தை புனரமைப்புச் செய்து பயன்படுத்த முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அது இயங்குநிலைக்கு வரும் வரையில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தை தற்காலிகமாக வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த பொலிஸ் அதிகாரி

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த பொலிஸ் அதிகாரி

போதை மாத்திரை பயன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மூடப்பட்ட பாடசாலைகள் சில உள்ளன என்றும் அந்தக் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் அவற்றில் செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன், மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை | Rehabilitation Center To Set Up In North

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

உடனடி நடவடிக்கை

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு இல்லத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தை மறுவாழ்வு நிலையத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை | Rehabilitation Center To Set Up In North

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உளவள ஆலோசகர்கள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் இணைப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் நேரடியாகவும், வடக்கின் ஏனைய மாவட்டங்களின் மாவட்;டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ஆகியோர் 'சூம்' செயலி ஊடாக இணைந்து கொண்டனர்.

பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை

பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US