பிள்ளையான் - கருணாவையும் சி.வி.கே.சிவஞானம் விரைவில் சந்திக்கலாம்!
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழரசுக்கட்சியின் ஆயுட் கால உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து தமிழரசுக்கட்சி பயணிக்க வேண்டும் என்றனர்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் அவர்களுடனும் கூட்டு சேர வாய்ப்புள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி சேர முடிவெடுத்த இவர்களுக்கு பிள்ளையான் - கருணாவுடன் கூட்டணி சேர்வது இலகுவானது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆரோய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா




