சி.வி.கே டக்ளஸ் சந்திப்பு..! கட்சிக்குள் போர்க்கொடி
டக்ளஸ் - சிவஞானம் சந்திப்பை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எமது தமிழ்த் தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட முடியாது. தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கைக்கு எதிர்ப்பாக ஒருபோதும் நாம் செயற்படப் போவதுமில்லை. இது திண்ணம்.
வன்மையான எதிர்ப்பு
கட்சியின் உயர்மட்டக் குழுவின் (மத்தியகுழு) அனுமதியில்லாமல் தனிப்பட்ட முடிவுகள் எதனையும் நாம் ஏற்கவும் முடியாது அனுமதிக்கவும் முடியாது.
டக்ளஸ் மற்றும் சிவஞானமின் சந்திப்பிற்கு கட்சி பொறுப்பேற்க முடியாது என்பதுடன் இதனை எனது தனிப்பட்ட முடிவின் அடிப்படையில் வன்மையான எதிர்ப்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன் - என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri