நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பம்
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய(24) நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமானது.
நிலையான விதிகள் 22, 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளபடி, இன்று காலை 9.30 மணி முதல் 10 மணி வரையிலான நேரம் நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
விவாதம் ஆரம்பம்
வாய்மொழி பதில்கள் தேவைப்படும் கேள்விகளுக்காக காலை 10 மணி முதல் 11 மணி வரையிலான நேரமும், நிலையான விதிகள் 27ஃ2-இன் கீழ் உள்ள கேள்விகளுக்காக காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு, நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதிக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்திருந்தது. அதன் பிரகாரம் குறித்த தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போதைக்கு ஆரம்பமாகியுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், எதிர்க்கட்சியால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவத்தின்போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதற்காக நீதி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் இன்று விவாதிக்கப்படவிருந்த தனிநபர் தீர்மானங்கள் எதிர்காலத்தில் வேறொரு திகதியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam