வத்தளையில் சந்தேகநபரை மிரட்டி பணம் பறித்த பொலிஸ் அதிகாரி கைது
திருட்டு வழக்கொன்றில் சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பிரிவு குற்றப்புலனாய்வுப்பணியகம் தெரிவித்துள்ளது.
வத்தளை பொலிஸில் பணியாற்றும் உதவி பொலிஸ் ஆய்வாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மிரட்டல்
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த நபரொருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை தேடுவதாகக்கூறி, சந்தேகத்திற்குரிய உதவி பொலிஸ் ஆய்வாளர் உட்பட ஒரு குழுவினர், அவரை கைது செய்யாமல் வத்தளை பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பணத்தை பறித்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் ஆய்வாளர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam