இரு நாட்கள் இடைநிறுத்தப்படும் சேவைகள்..! EPF நிதி பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இரத்தக்கறையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்! சீன நாட்டவர் படுகொலையில் புதிய திருப்பம்
அத்தியாவசிய பராமரிப்புப்பணிகள்
தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்தவினால் வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.
இத்தற்காலிக சேவை இடைநிறுத்தமானது தொழிற்திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
மாற்றுத்திகதி
இதற்கமைய, குறித்த இரு நாட்களிலும் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எந்தவொரு சேவையும் வழங்கப்படமாட்டாது.
அத்துடன், குறித்த இரு நாட்களிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே நேரத்தை ஒதுக்கியுள்ள பொதுமக்கள், எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அமையும் வேறு ஏதேனும் ஒரு வேலை நாளில் சம்பந்தப்பட்ட தொழில் அலுவலகத்துக்கு வருகை தந்து உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.