கிளிநொச்சியில் டிப்பர் மோதி நபர் பலி - திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு
சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராகப் போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு, கண் முன்னே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபநாத் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோத மண் அகழ்வு
மேற்படி நபர், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக்குரல் கொடுத்து வந்த நிலையில் நேற்று புதன்கிழமை மனைவியுடன், இரணைமடுப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை பின்னால் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியது.

அதன்போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மனைவி டிப்பர் வாகனத்தைக் கண்ணுற்று மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியதால் அவர் தப்பித்துக் கொண்டதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிப்பர் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 23 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam