பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பிரித்தானியா திரும்பலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் பிரித்தானியா திரும்பாமலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழரான சுதர்சன் (41), 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.
சட்டவிரோதமாக நிறுவனம் ஒன்றில் பணி புரிந்ததாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டதையடுத்து அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
புலம்பெயர்தல் தீர்ப்பாயம்
தனது மனைவி,மகன், மகள் ஆகியோரை பிரிந்தே அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், புலம்பெயர்தல் தீர்ப்பாயம் ஒன்று சுதர்சன் பிரித்தானியா திரும்பலாம் என தீர்ப்பளித்துள்ளது.
எனினும், உள்துறைச் செயலகம், சுதர்சன் பிரித்தானியா திரும்புவதற்கான விசா நடைமுறைகளை பல மாதங்களாக தாமதப்படுத்திவந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர் மனித உரிமைகள் சட்டத்தரணியான நாக கந்தையா உள்துறை அலுவலகத்தில் தாமதத்துக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் பின்னர், மன்னிப்புக் இம்மாத ஆரம்பத்தில் சுதர்சன் பிரித்தானியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தான் தங்கியிருந்த வீட்டில் சுயநினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |