காவந்திஸ்ஸ காட்டு யானை மரணம் - அரச அதிகாரி ஒருவர் கைது
கல்கமுவ பகுதியில் புகழ்பெற்ற ‘காவந்திஸ்ஸ’ என்ற காட்டு யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டு, எகட்டுவெவ பிரதேச செயலகத்தின் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான விசேட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபரின் வீட்டிலிருந்து இரண்டு உள்நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 24 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிகிச்சை பெற்று வந்த நிலையில்
அவர் ஏற்கனவே "டியானா" எனப்படும் மற்றொரு யானை மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் உயரமான மற்றும் பெரிய தந்தங்களைக் கொண்ட காட்டு யானைகளில் ஒன்றான ‘காவந்திஸ்ஸ’, வலது முன்னங்காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 16 அன்று கல்கமுவ நெல் வயல் பகுதியில் உயிரிழந்தது.
காயங்கள் ஆறியிருந்த போதிலும், உடல்நலக் குறைவு மற்றும் உணவு உட்கொள்ளாமை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
தேசிய சொத்தாக மதிக்கப்பட்ட இந்த யானையின் மரணம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.