நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி தொடர்பில் மகிந்தவின் சகா விடுத்துள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்று ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியளித்தாலும், இலங்கையில் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரச தரப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கியவராக கருதப்படும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga), 2024 ஜூன் 14 அல்லது அதற்குப் பிறகு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்வை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டள்ளது.
பல சுற்று அரசியல் பேச்சுவார்த்தை
இந்நிலையில், ஜனாதிபதியின் தரப்பு மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் பல சுற்று அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இதன்படி இறுதியாக இடம்பெற்ற சந்திப்பிலும் நாடாளுமன்றம் கலைப்பே முக்கிய இடத்தை பிடித்திருந்தது என்று உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |