தானிஷ் அலிக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதா! - செய்திகளின் தொகுப்பு (Video)
தன்னுடைய வங்கிக்கணக்கில் 500 ரூபாய் பணமே இருக்கும் என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் இதன்போது தானிஷ் அலி கூறுகையில், ”என்னுடைய வங்கிக்கணக்கில் 500 ரூபாய் பணமே இருக்கும்.
வங்கிக்கடன் இரண்டு கோடி ரூபா உள்ளது. நானே மிகவும் வறுமையில் இருக்கின்றேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர். நான் கோடீஸ்வரன் இல்லை. இது தான் உண்மையான நிலவரம்” என குறிப்பிட்டுள்ளார்.
“அத்துடன், நான் வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவன், மலையகத்தைச் சேர்ந்தவன் அல்லது கொழும்பைச் சேர்ந்தவன் என்ற பாகுபாடற்ற மக்கள் போராட்டமே காலிமுகத்திடல் போராட்டம்.
ஆனால் இந்த போராட்டம் முன்னோக்கி கொண்டு செல்லப்படும். 74 வருடங்களாக எழுதப்பட்ட நடைமுறையை மாற்றும் போராட்டமே இது” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
