அமெரிக்க குடியுரிமை: ட்ரம்ப் அறிவித்த Gold-Platinum கார்டுகளின் விலைகள்
அமெரிக்க குடியுரிமைக்கு வழிவகுக்கும் ட்ரம்ப் GOLD CARD விசாவை விற்பனைக்கு கொண்டுவருவதாகவும், அதற்கு 1 மில்லியன் டொலர் (ரூ.8.8 கோடி) விலை நிர்ணயிக்கப்போவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
ட்ரம்பின் அறிவிப்பு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமைக்கு வழிவகுக்கும் ட்ரம்ப் GOLD CARD விசாவை விற்பனைக்கு கொண்டுவருவதாகவும், அதற்கு 1 மில்லியன் டாலர் (ரூ.8.8 கோடி) விலை நிர்ணயிக்கப்போவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேபோல், வெளிநாட்டு ஊழியர்களை வேளைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் கார்ப்பரேட் GOLD CARD மூலம் 2 மில்லியன் டொலர் (ரூ.17.5 கோடி) விலை செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க வரிகள், வருமானம் போன்ற எந்த நிபந்தனையுமின்றி 270 நாட்கள் அமெரிக்காவில் செலவிட 5 மில்லியன் டொலர் (ரூ.44 கோடி) விலையில் ட்ரம்ப் PLATINUM CARD நடைமுறைக்கு வரும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று ட்ரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam