ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டு! தானிஷ் அலிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர்வு மனுவொன்றின் மூலம் அவருக்குப் பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிப்பு
இந்த நிலையில் சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதிய சாட்சிகள் இல்லை என்பதால் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
| தனிஸ் அலிக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு |
பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்க உத்தரவு
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபரை கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் தானிஷ் அலி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - அனதி
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam