வங்கிக்கணக்கில் உள்ள பணம்! உண்மை நிலவரத்தை பகிரங்கப்படுத்தும் தானிஷ் அலி (Video)
என்னுடைய வங்கிக்கணக்கில் 500 ரூபாய் பணமே இருக்கும் என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்தார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் இதன்போது தானிஷ் அலி கூறுகையில், என்னுடைய வங்கிக்கணக்கில் 500 ரூபாய் பணமே இருக்கும்.
வங்கிக்கடன் இரண்டு கோடி ரூபா உள்ளது. நானே மிகவும் வறுமையில் இருக்கின்றேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர். நான் கோடீஸ்வரன் இல்லை.
இது தான் உண்மையான நிலவரம் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நான் வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவன், மலையகத்தைச் சேர்ந்தவன் அல்லது கொழும்பைச் சேர்ந்தவன் என்ற பாகுபாடற்ற மக்கள் போராட்டமே காலிமுகத்திடல் போராட்டம்.
ஆனால் இந்த போராட்டம் முன்னோக்கி கொண்டு செல்லப்படும்.
74 வருடங்களாக எழுதப்பட்ட நடைமுறையை மாற்றும் போராட்டமே இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam