ரணில் விக்ரமசிங்க இதுவரை ஒரு தீவிரவாதியாகவே செயற்படுகிறார் : தானிஷ் அலி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை ஒரு தீவிரவாதியாகவே செயற்படுகிறார் என தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையொன்றுக்கு வருகை தந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தீவிரவாதத்தை கொண்டு செல்வது ரணில் ராஜபக்ச
போராட்டக்காரர்களை தீவிரவாதி என்று கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எங்களை கைது செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்து வருகின்றார்.
உண்மையில் தீவிரவாதத்தை கொண்டு செல்வது ரணில் ராஜபக்ச தான்.
இதுவரைக்கும் வாழ்க்கையில் கிடைக்காத கனவு ஒன்று நிறைவேறியதாக நினைத்துகொண்டு அந்த கனவிற்காக இலங்கை வாழ் மக்களை துன்புறுத்தி கொண்டு இருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
மேலும், சேனாதி குருகே, அமல் சாலிந்த, சாலிக்க ஆகிய மூவரையும் விளக்கமறியில் வைத்துள்ளனர்.
அமல் சாலிந்தவை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கின்றனர். அவர் 56நாட்களுக்க பிறகு வெளியில் வருகின்றார். இந்நிலையில் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கின்றனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்காக வீதியில் செல்லும் வித்தியாசமான போராட்டம் ஒன்றையும் நாங்கள் முன்னெடுப்போம் மக்கள் எவ்வித பயமும் இன்றி போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.