உக்ரைன் - ரஷ்ய போரின் எதிரொலி! ரஷ்யாவை சுற்றிச் செல்லும் விமானங்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 31 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கீவ் நகரில் ரஷ்யப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கியுள்ளதுடன், அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் தமது வான் பரப்பினை மூடி ரஷ்யாவிற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், ரஷ்யாவும் உலக நாடுகளுக்கு பல தடைகளை விதித்திருந்தது.
அந்த வகையில், ஐரோப்பிய விமானங்கள் ரஷ்ய வான்பரப்பைத் தவிர்த்துச் சுற்றுப் பாதையில் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பயணத் தொலைவு, நேரம், எரிபொருள் செலவு ஆகியவற்றுடன், காற்றில் கலக்கும் புகை மாசும் அதிகரித்துள்ளது.
உக்ரைன் போரையடுத்து மேலை நாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததற்குப் பதிலடியாக ரஷ்யா தனது வான்பரப்பு வழியே செல்ல ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றின் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.
இதனால் லண்டன், ஹெல்சிங்கி, பிராங்க்பர்ட் நகரங்களில் இருந்து டோக்கியோ, சியோல் நகரங்களுக்கு விமானங்கள் ரஷ்யாவைச் சுற்றிச் செல்கின்றன. டோக்கியோவில் இருந்து ரஷ்யா வழியே லண்டனுக்குச் செல்வதை விட, வட பசிபிக், அலாஸ்கா, கனடா, கிரீன்லாந்து ஆகியவற்றின் வழியாகச் செல்லக் கூடுதலாக இரண்டரை மணி நேரம் ஆகிறது.
சுற்றுப் பாதையில் செல்வதால் கூடுதலாக 21ஆயிரம் லிட்டர் எரிபொருள் செலவாகிறது. இதனால் எரிபொருள் செலவு 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் கூடுதலாக கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலப்பதாக அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.







ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
