இந்தியாவில் இணையக்குற்றம்: முக்கிய செயற்பாட்டாளர்கள் இலங்கையில்
இந்தியாவின் பெங்களூரில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சுமார் 4 கோடி ரூபாய் இணைய வங்கி மோசடியில் இலங்கையும் தொடர்புப்பட்டுள்ள சந்தேகத்தை இந்திய ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள வயதான தம்பதியினரின் வங்கிக்கணக்கில் இருந்து பல இலட்சம் ரூபாய்கள் இணைய மோசடி மூலம் பெறப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே இரண்டு பேர் பெங்களூர் பொலிஸார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இணையக்குற்றம்
அவர்களே இணையக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் தாம், இணையக்குற்றங்களில் சம்பந்தப்படவில்லை என்றும், இலங்கையில் கெசினோ விளையாட்டில் இருந்து பெறப்பட்ட பணமே வங்கிக்கணக்குகளில் காட்டப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே இந்த மோசடிகளில் ஈடுபடுவர்கள் இலங்கையிலும் இருப்பதாக இந்திய புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
