புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் முறைகேடான வழிகளில் சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024ம் ஆண்டின் டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் தினத்தை முன்னிட்டு 332 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்திருந்தார்.
எனினும், அன்றையதினம் 389 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் 57 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
வெசாக் தின பொதுமன்னிப்பு
அதே போன்று கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செயற்பாட்டின் போது 11 கைதிகள் மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வெசாக் தின பொதுமன்னிப்பின் கீழ் 388 கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

எனினும், அதரற்கு மேலதிகமாக 26 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri