தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொன்ற இளைஞன்
கேகாலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
24 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை - தெரணியகல, சப்புமல்கந்த தோட்டத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
சப்புமல்கந்த தோட்டத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளைஞனின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
தனது தாயின் இரண்டாவது கணவரையே குறித்த இளைஞன் அடித்துக் கொன்றுள்ளதாகவும், குடும்பத் தகராறு இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இளைஞன் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
