ஜப்பானை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி: தீவிரமடையும் கனமழை
பசிபிக் பெருங்கடலில் உருவான 'டொல்பின்' தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியதென ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம்
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பொனின் தீவுகளை ஏற்கனவே கடந்துள்ள இந்த சூறாவளி, வார இறுதியில் ஒகினாவா தீவில் முழுமையாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் கடல் அலை சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக விமானம் மற்றும் படகுப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அத்துடன், இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக தாய்வானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், சீனா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே மின் தடை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.