ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்
ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார்.
இடையூறு விளைவிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளைத் தெஹ்ரானில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் விமர்சித்த போதிலும், ஒப்பந்தம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாகவும், நாளைய தினத்தின் இறுதிக்குள் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் வெறும் உடன்படிக்கை என்பதை விட, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல்சார் வர்த்தக நடைமுறையை சீரமைப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளது.
ஈரான் - ஓமன் இடையிலான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மேலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
எனினும், மோதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைத் தவிர்க்கவும், நிரந்தர தீர்வை எட்டவும் பின்வரும் சிக்கல்கள் ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.