இந்தியாவில் நடந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒருவர் சுட்டுக்கொலை
இந்தியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயற்பட்ட லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ரசவுல்லா நிஸாமனி என்ற அபு சயியுல்லா என்பவர், பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று(18.05.2025) இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வைத்து அவரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நடந்த 3 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இவர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதல்கள்
2001இல் காஸ்மீரின் ராம்பூரில் சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல், 2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு மீதான தாக்குதல், 2006இல் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் என்பனவே அவையாகும்.

இந்தநிலையில், அபு சயியுல்லாவின் கொலைக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமைக் கோரவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        