யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்
யாழில் இளைஞன் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வண்ணார்பண்ணை, கே.கே.எஸ் வீதியடியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இன்றையதினம்(18.05.2025) இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடந்த 16ஆம் திகதி மட்டக்களப்புக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், குறித்த இளைஞனும் அவரது அண்ணாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
மதுபான பாவனை
பின்னர் நேற்றிரவு அவர்களது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து மதுபான பாவனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர், நண்பர்கள் திரும்பிச் சென்றவேளை சகோதரர்கள் இருவரும் உறக்கத்துக்கு சென்றனர்.
இதனையடுத்து, குறித்த இளைஞனின் சகோதரன் அதிகாலை 1.30 மணியளவில் குறித்த இளைஞனை காணாத நிலையில் வெளியே வந்து பார்த்துள்ளார். இதன்போது குறித்த இளைஞன் கீழே விழுந்து காணப்பட்டார்.
உடற்கூற்று பரிசோதனை
பின்னர் சகோதரனும் உறவினரும் இணைந்து, அவசர நோயாளர் காவு வண்டி மூலம், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மரணத்துக்கான காரணிகள் அறியப்படாத நிலையில், உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
