மதுபான விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!
இலங்கையில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுபான போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்தமைக்கு அமைவாக, அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
வெற்று போத்தல்கள் உற்பத்தி
வெற்று போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் கூறி, 750 மில்லி லீட்டர் வெற்று போத்தல் ஒன்றுக்கு 160 ரூபாவையும், 375 மில்லி லீட்டர் போத்தலுக்கு 140 ரூபாவையும், 180 மில்லி லீட்டர் போத்தலுக்கு 109 ரூபாவையும் கட்டணமாக உயர்த்தியுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் 'கல்' மதுபான போத்தலுக்காக மதுபானசாலைகளினால் இதுவரை அறவிடப்பட்ட 60 ரூபா வைப்புத்தொகை 100 ரூபா வரையிலும், அரைப் போத்தலுக்கான வைப்புத்தொகை 40 ரூபாவிலிருந்து 70 ரூபா வரையிலும், கால் போத்தலுக்கான வைப்புத்தொகை 20 ரூபாவிலிருந்து 30 ரூபா வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெற்று போத்தல்களை மீண்டும் பொறுப்பேற்காத நிறுவனங்கள், மதுபானத்தின் விலையுடனேயே போத்தலின் மேலதிகச் செலவையும் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் அறவிட நடவடிக்கை எடுத்துள்ளன.
750 மி.லீ (முழு போத்தல்) 100 ரூபா வைப்புத்தொகையுடன் புதிய விலை 3,800 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 360 ரூபா மதுபானசாலைக்குக் கிடைப்பதுடன், அரசாங்கத்திற்கு பெறுமதி சேர் வரியாக சுமார் 611 ரூபா செலுத்தப்படுவதாகவும் நிறுவனங்கள் கூறுகின்றன.
மதுவரி உயர்வு
மதுவரி உயர்த்தப்படாவிட்டாலும், வெற்று போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளதால், அந்தத் தொகையை நுகர்வோரிடமிருந்து அறவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த விலை அதிகரிப்பு கடந்த 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2022ல் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மதுபானங்களின் விலைகள் சுமார் 100% உயர்த்தப்பட்டன.
2024ல் மதுவரி உயர்த்தப்பட்டதால் அனைத்து மதுபானங்களின் விலைகளும் 50 - 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டன.
2025 ஜனவரியில் மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு மதுபான விலைகள் மேலும் 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டன.
இது தொடர்பாக கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, உற்பத்திச் செலவுக்கு அமைவாக உயர்த்தப்பட்ட வைப்புத்தொகை தொடர்பான விலைப்பட்டியலை உற்பத்தி நிறுவனங்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்! புலனாய்வாளர்களிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள்