தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்.. மார்க் கார்னி உறுதி!
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், "இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற போரின் ஆயுத மோதல் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை - துண்டாடப்பட்ட குடும்பங்களை, பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை நினைவு கூருகிறோம்.
தமிழ் இனப்படுகொலை
கனடாவின் தமிழ் சமூகத்தையும் நாங்கள் நினைவு கூருகிறோம், அவர்கள், தங்களது அன்புக்குரியவர்களின் நினைவையும், கனடா முழுவதும் திட்டமிடப்பட்ட பல நினைவுச் சேவைகளையும் கொண்டு செல்கிறார்கள்.

எனவே, தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் உண்மை மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுப்பதற்கும் சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கிறது.
இந்த புனிதமான ஆண்டு நிறைவை நாம் நினைவுகூரும் வேளையில், அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தைரியத்துடனும், நீடித்த அமைதிக்காகவும் செயல்படுவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்" என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam