2009க்கு பின் ஈழத்தமிழருக்கு ஆபத்தாக மாறும் புதிய திருமணங்கள்!
இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்வதை விட அவை வெளிப்படுத்தப்படவில்லை என்றே கூற வேண்டும் என ஓய்வு நிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார்.
இன்றைய நவீன உலகில், இதுவரை நடந்தவை இனிமேல் நடக்க போகின்றவை என அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேசத்திடம் ஆதாரம் உள்ளது.
ஆனால் இங்கு அந்த செயலை செய்தவன் யார்? தனது நண்பனா? அல்லது எதிரியா? என்பதை பொறுத்து தான் உலகம் அதற்கான முடிவுகளை எடுக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று, அனைவராலும் முள்ளிவாய்க்கால் செல்ல முடியாவிட்டாலும் தமது சொந்த இடங்களில் இருந்து உயிர்நீத்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தி, இந்த அழிவின் காரண காரியங்களை அறிந்து நினைவில்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2009க்கு பின்னர் ஈழத்தமிழருக்கு ஆபத்தாக மாறும் புதிய திருமணங்கள் தொடர்பில், அவர் லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
