இந்தியாவில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள்!
இலங்கையின், மத்திய மலைநாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண்டியைச் சேர்ந்த 43 வயதுடைய எம்.மொஹமட் கியாஸ், அவரது மனைவியான 34 வயதுடைய எம். பாத்திமா ஃபர்ஹானா ஆகியோரும், 12 மற்றும் 4 வயதுடைய அவர்களது மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
தமிழக பொலிஸார்
படகு மூலமாக இலங்கையிலிருந்து பயணித்த இவர்கள், இன்று(10) அதிகாலை இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையேயான கரையில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகத் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான பொருளாதார நிலைமை காரணமாக தாங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, அவர்கள் இந்திய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை மண்டபம் மறுவாழ்வு மையத்தில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நாட்டுக்கும் ஆபத்தாக மாறும் செயல்! ஜனாதிபதியை பதவி விலக கோரி நாமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
