அமெரிக்க வைத்தியசாலைகளில் சைபர் கிரைம் தாக்குதல்: சுகாதார சேவைகள் முடக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்பட 5 மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கணனிகளில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல்களினால் 900 க்கும் மேற்பட்ட கணனிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட வைத்தியசாலைகளிலுள்ள சர்வர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன் காரணமாக அங்கு சுகாதார சேவைகள் பெரிதும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சைபர் கிரைம் பொலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் ரஷியாவை சேர்ந்த 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |