பங்களாதேஷை வீழ்த்தி புதிய சாதனை படைத்த இலங்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை அணி தரப்பில் சமரவிக்ரம 93 ஓட்டங்களும் , குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களும் விளாசினர். வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் மற்றும் ஹசன் மஹ்முத் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணி சாதனை
பின்னர் வங்கதேசம் அணி 259 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள் இருவரையும் இலங்கை அணி தலைவர் ஷனக வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 70 ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அனுபவ வீரர் ரஹிம் - ஹிர்தாய் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக வங்கதேச அணி 48.1 ஓவர்களில் 236 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும். இதன் மூலம் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய அணிக்கு பின் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
