ஹாங்காங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை: இருவர் உயிரிழப்பு
ஹாங்காங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துவருவதாக ஹாங்காங் வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மழை வீழ்ச்சியானது 158.1 மில்லிமீட்டர் அளவில் பதிவானதாக ஹாங்காங் வானிலை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
1884 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு மழை முதல் முறையாக பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனமழையால் ஹாங்காங் வீதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மெட்ரோ தொடருந்து நிலையங்கள், குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மீட்பு பணிகள்
இந்நிலையில் பாடசாலைகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சமடையுமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீதிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், குப்பைகளை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கிராஸ் ஹார்பர் சுரங்கப்பாதையும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
கனமழை காரணமாக அங்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதடன், இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், படுகாயம் அடைந்த 20 பேருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
