கோவிட் தொற்றால் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளாத ஸ்பெயின் ஜனாதிபதி
இந்தியாவில் இன்றைய தினம் ஆரம்பமாகிய ஜி 20 மாநாட்டிற்கு புறப்பட்ட ஸ்பெயின் ஜனாதிபதிக்கு கோவிட் தொற்று உறுதியானதால் அவரது பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் இந்தியாவிற்கு செல்ல இருந்தார்.
மருத்துவ பரிசோதனை
இறுதி நேரத்தில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனால் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பதிலாக துணை அதிபர் நடியோ கெல்வினோ, பொருளாதார அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என ஸ்பெயின் அதிபர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |