இலங்கையை வந்தடைந்தார் திருமதி உலக அழகி
மிஸ் ஸ்ரீலங்கா - 2023 போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திருமதி உலக அழகி சர்கம் கௌஷல் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இப்போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 09/13 ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி நிகழ்வில் இலங்கையை சேர்ந்த 23 திருமணமான பெண்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-142 இல் மும்பையிலிருந்து இன்று காலை 05.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மிஸ் மேரேட் ஸ்ரீலங்கா திட்டத்தின் தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் அவரை வரவேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்டு இலங்கையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ள அவர், எதிர்வரும் 15ம் திகதி இந்தியா திரும்ப உள்ளார். .
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam