உக்ரைனுக்கு சென்ற பிரித்தானியர் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு கொடூரமாக கொலை
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடச் சென்ற பிரித்தானியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்திலுள்ள Burnley என்னுமிடத்தைச் சேர்ந்த ஜோர்டன் (Jordan Chadwick, 31) 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதற்காக உக்ரைன் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜூன் மாதம், 26 ஆம் திகதி நீர் நிலை ஒன்றில், கைகள் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விசாரணை ஆரம்பம்
இந்நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தன் மகனுடைய தைரியம் மற்றும் மனம் தளராமை ஆகிய குணங்களால் தாங்கள் பெருமிதம் அடைந்தாலும், அவரது மரணம் தங்களை அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்துள்ளதாக ஜோர்டனின் தாயாகிய பிரெண்டா தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam