வேட்புமனுவில் கையொப்பமிட்ட ஜீவன் தொண்டமான்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
குறித்த வேட்புமனுவில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (10.10.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டுள்ளார்.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி
யானை சின்னம்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியிருந்தது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri