ரஷ்ய - உக்ரைன் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ள உலகின் மிக பெரிய விமானம்! வெளியான புகைப்படங்கள் (PHOTOS)
ரஷ்ய - உக்ரைன் தாக்குதலில் உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ரஷ்ய படைகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 என்ற விமானம், உக்ரைனில் தயாரிக்கப்பட்டது.
உக்ரைன் ஹொஸ்டமெல் விமான நிலையத்திலேயே இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ’அண்டனோவ் 225 மிரியா’ கடந்த 28 ஆம் திகதி ரஷ்ய படைகளின் தாக்குதலில் தகர்க்கப்பட்டது.
6 எஞ்சின்கள், 314 டன் எடைகொண்ட இந்த சரக்கு விமானம் கோவிட் பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பெருதவி செய்ததுடன், சரக்கு விமானம் ரஷ்ய தாக்குதலில் தற்போது பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது.
விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு செலவு ஏற்படலாம் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.








தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
