ஐ.பி.எல் இறுதி போட்டி: சென்னை-குஜராத் கடந்து வந்த பாதை..!
வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் மனித வாழ்வில் சில விடயங்கள் தான் அவர்களை நின்று இரசிக்க வைக்கும்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் மனநிலைகேற்ப சில பொழுதுபோக்கு காணப்படும். அவர்கள் தங்களை அமைதிப்படுத்திக்கொள்ள தமக்கு பிடித்த விடயத்தில் ஈடுபட்டுக்கொள்வார்கள்.
இந்த வரிசையில் விளையாட்டு என்பது ஒருவரின் மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்வதில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளளது.
மைதானத்தில் களமிறங்கி விளையாடும் வீரராக இருந்தாலும் சரி, அந்த விளையாட்டை பார்த்து இரசிக்கும் இரசிகனாக இருந்தாலும் சரி அவர்கள் விளையாட்டில் ஈடுபாடு செலுத்தும் போது மிகவும் மகிழ்ச்சியான, குதூகலமான உற்சாகம் நிறைந்த ஓர் உலகுக்கு சென்று விடுவார்கள்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த வருட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பர் கிங் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி என்பவற்றுக்கு இடையிலான இறுதி சுற்று அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்றைய தினம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2023
2007ஆம் ஆண்டு, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால், இந்தியன் பிரீமியர் லீக் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் இந்தியன் பிரீமியர் லீக் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 16 ஆவது போட்டி தொடர் இவ்வாண்டு நடைபெறுகின்றது.
TATA IPL 2023 இல் மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்,குஜராத் டைட்டன்ஸ்,டெல்லி கெபிடல்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,பஞ்சாப் கிங்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் என மொத்தம் 10 அணிகள் பங்குப்பற்றின.
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் ஆரம்பமானது. இந்த தொடருக்கான லீக் போட்டிகள் மே 21ம் திகதி வரை நடைபெற்றன.
பத்து அணிகளுக்குள் இடம்பெற்ற லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி,ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி என்பன Playoff சுற்றுக்கு தெரிவாகின.
இந்த Playoff சுற்று மே 23 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களமிறங்கின.
இறுதி போட்டி
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி10 ஆவது தடவையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதேவேளை முதல் வெளியேற்றுதல் (Eliminator) சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது.
இதனடிப்படையில் லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியதுடன் பிளே ஒப் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிக்கான் சுற்றில் மும்பை அணி விளையாடியது.
இருப்பினும் இறுதி சுற்றுக்கான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 234 ஓட்டங்களை இலக்காக கொண்டு விளையாடிய மும்பை அணி 171 ஓட்டங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.
சாம்பியன் அணிகள் விபரம்
IPL தொடரில் இதுவரை காலமும் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று, அதிக தடவை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்ற பெறுமையுடன் நடமாடிய மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிக்கான் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இறுதி போட்டியில் சந்திக்க தயாராகி உள்ளது.
IPL தொடரில் மும்பை அணிக்கு அடுத்தப்படியாக நான்கு முறை சாம்பியனான அணி என்ற பெருமையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியில் களமிறங்குகின்றது.
இதேவேளை நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஆண்டு(2022) இடம்பெற்ற இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.
அதேவேகத்தில் இந்த ஆண்டும் சாம்பியனாவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து இரண்டாவது வெற்றிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகின்றது.
ஆனால் சென்னை அணி இம்முறை IPL தொடர் கிண்ணத்தை கைப்பற்றி மும்பை அணிக்கு சமமாக தம்மை நிரூபிக்க முயற்சிப்பதுடன் அதிக முறை சாம்பியனான அணி என்ற பெருமையை தனதாக்கி கொள்ள முயற்சிக்கின்றது.
இருவேறு நோக்கங்கள்
இவ்வாறு இருவேறு நோக்கங்களின் அடிப்படையில் இறுதி போட்டியில் களமிறங்கும் அணிகள் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.
இதுவரை இடம்பெற்ற 14 போட்டிகளில் 10 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளதுடன் 4 போட்டிகளில் தோல்வியடைந்து 20 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை சென்னை அணி 14 போட்டிகளில் 08 போட்டிகளில் வெற்றி பெற்றுள்துடன் 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும் ஒரு போட்டியில் லக்னோ அணியுடன் விளையாடி சம புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
இதனடிப்படையில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் 17 புள்ளிகளை பெற்றுக்கொண்டன.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் இன்று(28.05.2023) இரவு 7.30 மணிக்கு, சென்னை அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கும் இறுதி போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில்லை எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
IPL 2023-அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் விபரம்
IPL 2023-அதிக விக்கெட்களை பெற்ற வீரர்கள் விபரம்
IPL 2023 -அணிகள் பெற்ற புள்ளிகள் தொடர்பான விபரம்
you may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |