PLAYOFF சுற்றுக்குள் நுழைந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி..!
இன்று நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு டெல்லி அணியை வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி பிளேஒப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் நிறைவில் 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
224 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 9 விக்கட் இழப்புக்கு 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
முதலாம் இணைப்பு
2023 ஆம் ஆண்டுக்காண ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
டெல்லியில் இன்று(20.05.2023) இடம்பெற்ற இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
டெல்லி அணிக்கான இலக்கு
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 87 ஓட்டங்களையும், ருத்துராஜ் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
224 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகின்றது.
இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் நேரடியாக PLAYOFF சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
