வீதியில் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்! உக்ரைன் வெளியிட்ட காணொளி ஆதாரம் (VIDEO)
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றது.
ரஷ்ய இராணுவ வீரர்கள், தங்கள் நாட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டிய உக்ரைன் அவை தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
In Kherson, Russian war criminals opened fire at unarmed people who peacefully protested against invaders. You can see a wounded pensioner. This is the ugly face of Russia, a disgrace to humankind. We must stop Russia! Sanction them, isolate them, hold war criminals to account. pic.twitter.com/WeItSykD3q
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 21, 2022
ரஷ்யாவின் பிடியில் இருக்கும் உக்ரைனின் கெர்சன் நகரில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்குவந்த ரஷ்ய வீரர்கள், திடீரென கையெறி புகைக்குண்டுகளை வீசியுள்ளதுடன், அங்கு துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டிருக்கின்றது.
இந்த திடீர் தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் தெடர்பான காணொளியை வெளியிட்டிருக்கும் உக்ரைன் அரசு, ரஷ்ய வீரர்கள் பொதுமக்களிடம் வன்முறையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம், `ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கை என்ற மிரட்டல்களை உக்ரைன் அரசு பணியாது’ என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.