இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

Sri Lanka Police Tamil nadu India Crime Drugs
By Ashik Sep 09, 2023 04:04 AM GMT
Report

இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி மதிப்புள்ள 6 கிலோ ஐஸ் போதைப்பொருட்களை மண்டபம் போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற பெண் உட்பட நாலு பேரை கைது செய்து போலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் மண்டபம் அடுத்த வேதாளை - சீனியப்பா தர்கா மற்றும் மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் சமீபகாலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

police

கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட காவல்துறை, மரைன் போலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் விசாரணை

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை மண்டபம் அடுத்த வேதாளை எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் சேதுராஜன் என்பவர் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் இராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கண்காணிப்பில் இராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி மற்றும் மண்டபம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய போலிஸார் சேது ராஜன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

arrested

அப்போது வீட்டில் 6 பாக்கெட்டுகளில் 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நாககுமார் மற்றும் சூடவலை குச்சு பகுதியை சேர்ந்த அவரது உறவினர் சக்திவேல் ஆகியோரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் சென்னையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் காரில் வாங்கி வந்ததாக தெரியவந்ததையடுத்து இருவரையும் கைது செய்த போலிஸார் மண்டபம் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

கண்டியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்

கண்டியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்


கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய தொடர் விசாரணையில் வேதாளை எம்ஜிஆர் நகரை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் கூடை வலை குச்சு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய இருவரும் ஐஸ் போதைப்பொருளை நாககுமாருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல உடந்தையாக இருந்தது தெரியவந்ததையடுத்து அவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் நால்வரையும் கைது செய்தனர்.

dollar

சர்வதேச மதிப்பு 6 கோடி 

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி எனவும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நான்கு பேர் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐஸ் போதைப்பொருளை சென்னையில் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து தனிப்படை போலிஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்(Photos)

திருகோணமலையில் மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்(Photos)

இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக இருநாட்டு பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் நாட்டு படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

வெல்லவாய பகுதியில் இளைஞர் வெட்டிப் படுகொலை

வெல்லவாய பகுதியில் இளைஞர் வெட்டிப் படுகொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US