திருகோணமலையில் மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்(Photos)
திருகோணமலை- தோப்பூர் கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபானசாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று(08.09.2023) திருகோணமலை மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது.
தோப்பூர்-கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும், அதனால் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைப்பதற்கு தாம் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.