யூடியூபர் ஒருவருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை.. 1 பில்லியன் கோரிய அமைச்சர் நளிந்த
யூடியூபர் ஒருவர் மீது சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய மருந்து இறக்குமதி தொடர்பாக தனது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொய்யான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திய செயல் தொடர்பாக, டிசம்பர் 27ஆம் திகதி அமைச்சரின் சட்டத்தரணி சம்பத் யாலேவத்தே மூலம் இந்த சட்ட நடவடிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யூடியூபர் தனது யூடியூப் சேனலில் "உயிர்களைப் பறித்த இந்திய மருந்தின் மறைக்கப்பட்ட கதை, மேயர் பால்தாசரின் உறவினர் மற்றும் அமைச்சர் நளிந்தவின் மறைப்பு" என்ற தலைப்பில் வெளியிட்ட காணொளியில் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒன்டான்செட்ரான் தடுப்பூசி உட்பட பத்து மருந்துகள் குறித்து ஏற்கனவே முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் பயன்பாட்டினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த அறிக்கைகள் காரணமாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) மருந்தை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சரின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கூறிய எதையும் புறக்கணித்து, கேள்விக்குரிய மருந்தை இறக்குமதி செய்வதற்கும், அதன் விற்பனையாளருடன் கூட்டுச் சேர்ந்து, அது தொடர்பான பிரச்சினைகளை மறைப்பதற்கும் அமைச்சர் நேரடிப் பொறுப்பு என்ற தவறான எண்ணத்தை காணொளி மூலம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நளிந்த குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் ஆதரவு இருப்பதாகவும், கொழும்பு மேயர் வ்ராய் கெல்லி பால்தாசரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடிசி மருத்துவ இயக்குநர்களுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகக் கூறி, குறித்த யூடியூப் சேனலில் காணொளி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, தனது சட்டத்தரணி மூலம், இதுபோன்ற தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கத்தைப் பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை மீறி பொய்யான பிரசாரம் தொடர்ந்து பரப்பப்பட்டால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீட்டை வசூலிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri