வெல்லவாய பகுதியில் இளைஞர் வெட்டிப் படுகொலை
இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் நேற்று (08.09.2023) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று காணப்படுகின்றது எனப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸார் (Photos)
மதுபோதைக்கு அடிமையானவர்
33 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்த நிலையில், வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மதுபோதைக்கு அடிமையானவர் எனவும், அயல் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |