மயிலத்தமடுவில் தொடரும் மிருக வதை: வேடிக்கை பார்க்கும் பொலிஸார்
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபடுவோரால் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றிரவு (17.11.2023) இடம்பெற்றுள்ளது.

யாழில் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு பெற்றோர்களால் அதிபருக்கு கோரிக்கைக் கடிதம்(Photos)
உயிரிழக்கும் பசுக்கள்
இதன்போது கூளாவடி குளத்துவெட்டையில் பஞ்சாட்சரம் என்பவரது நான்கு வயது மதிக்கத்தக்க பசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் பூர்வீக பகுதிகளான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் தமிழ் பண்ணையாளர்கள் சில சிங்கள இனத்தவர்களால் அச்சுறுத்தபடுகின்றனர்.
அதேவேளை பொறி வைத்து பிடித்து கால்நடைகளை வெட்டும் செயற்பாட்டிலும் அத்து மீறிய குடியேற்றவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் மேய்ச்சலில் ஈடுபடும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யும் அட்டூழியங்களும் அரங்கேறி வருகின்றன.
மேலும், மாடுகளை கட்டிவைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்து சிங்கள பேரினவாதிகள் அங்குள்ள பொருட்களை நாசம் செய்து எரித்து விட்டு செல்வதாகவும் மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 2 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
