சீன இராணுவத்திடமிருந்து இலங்கை முப்படைக்கு கிடைத்த அன்பளிப்பு - சவேந்திர சில்வா அறிவித்துள்ள விடயம்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கையின் இராணுவத்தினருக்கு 3 இலட்சம் சினோர்பார்ம் தடுப்பூசிகள் அன்பளிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீன அரசாங்கம் பெருமளவான சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாகவும், பணத்துக்காகவும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு கோவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுமார் 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை நாட்டில் தீவிரமடைந்துள்ள கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ச்சியாக மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.