கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவுக்கமைய 4 இடங்களுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு உலக வர்த்தக மையத்திலுள்ள திலினியின் அலுவலகத்தை சோதனையிடும் நோக்கில் அழைத்துச் செல்லப்பட்ட போது அவரது கைவிலங்குகள் கழற்றப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பில்லியன் கணக்கான பணம் மோசடி
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பொது இடங்களுக்கு அல்லது விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லும் போது கைவிலங்கு இட வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில், திலினி பிரியமாலி விசாரணைக்கு இடையூறின்றி ஒத்துழைப்பு வழங்கியமையினால் அவரது கைவிலங்குகள் அகற்றப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி 250 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி மேற்கொண்டுள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan