திலினி பிரியமாலிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள விசேட உத்தரவு(Video)
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலிக்கு நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை வழங்கியுள்ளது.
இதற்கமைய நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சாதாரண நபர்களிடம் தனது கைவரிசையை காட்டிய திலினி பிரியமாலி:வெளிவரும் அதிர்ச்சி தகவல் |
நீதிமன்றத்தின் உத்தரவு
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட விசேட உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரை விசாரணைக்காக உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலதிக விசாரணைக்காக அவர் மேலும் மூன்று இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி உலங்கு வானூர்தியில் கதிர்காமம் சென்று வந்த திலினி - விசாரணையில் வெளியான தகவல் (Video) |