சாதாரண நபர்களிடம் தனது கைவரிசையை காட்டிய திலினி பிரியமாலி:வெளிவரும் அதிர்ச்சி தகவல்
பெரும் செல்வந்தர்களை ஏமாற்றி பலகோடி ரூபாவை மோசடி செய்த திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி மீது ஒவ்வொரு நாளும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
திலினி பிரியமாலி நிதிமோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீண்டகால நிதிமுறைக்கேடு
அரசியல்வாதிகள், நடிகர்கள் என்று பல்வேறு தரப்பிடம் இருந்து அவர் பல கோடி ரூபாய்களை மோசடி செய்தமை தெரியவந்ததை அடுத்தே கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திலினி பிரியமாலி மேற்கொண்ட மேலும் பல நிதிமோசடி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தகவல்களுக்கமைய நீண்டகாலமாகவே இவர் பல்வேறு நிதிமுறைக்கேடுகளுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
திலினி பிரியமாலி பல வருடங்களுக்கு முன்னர் சாதாரண நபர்களிடமும் நிதி மோசடிகளை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரண நபர்களிடம் நிதிமோசடி
பல வருடங்களுக்கு முன்னர் அவர் அல்டோ வகை மகிழுந்து ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அதன் உரிமையாளருக்கு போலியான காசோலை ஒன்றை வழங்கியமையே அவரது முதலாவது மோசடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவ்வாறு ஏமாற்றப்பட்ட மகிழுந்து உரிமையாளருக்கு கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள முகவரி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.அந்த முகவரிக்கு சென்ற போது, அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் திலினி பிரியமாலி மோசடிகளை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் மீண்டும் 2020ஆம் ஆண்டு குறித்த நபர் திலினி பிரியமாலியை முகப்புத்தகம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன்போது திலினி சுகபோக வாழ்க்கையை நடத்தி வந்தமை தெரியவந்ததாக, குறித்த நபர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அடிக்கடி உலங்கு வானூர்தியில் கதிர்காமம் சென்று வந்த திலினி - விசாரணையில் வெளியான தகவல் (Video) |
திலினி பிரியமாலி தொடர்பில் அவரது முன்னாள் காதலன் வெளியிட்டுள்ள தகவல் |
திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து தொலைபேசி மீட்பு |
இலங்கையில் திலினி பிரியமாலியின் செல்போன் தொடர்பிலும் வெளியாகியுள்ள தகவல் |