திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து தொலைபேசி மீட்பு
திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நிதி மோசடி
226 மில்லியன் ரூபாய், 60000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை மோசடி செய்துள்ளதாக திலினி பிரியமாலி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியை எதிர்வரும் அக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைபேசி மீட்பு
இவ்வாறானதொரு சூழ்நிலையில் திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளரொருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.