யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வெசாக்கூடுகள் உடைத்து சேதம்! கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பொலிஸார் தீவிர விசாரணை
இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகளே நேற்று(31)ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோாரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் தடயங்களைச் சேகரித்துள்ளதுடன், வெசாக் கூடுகளைச் சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிவதற்காகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri