சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
2018 ஆம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு தூதரக முகவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, வெளிநாட்டு தூதரக பணிகளில் பணிபுரியும் இந்தியர்கள், தமது முதலாளிகளுக்கு எதிராக தொழில்துறை தீர்ப்பாயத்தை அணுகுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பணிநீக்கம்
2008 முதல் 2018 வரை சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகத்தில் தூதரக உதவியாளராகப் பணியாற்றிய டி. செந்தில்குமாரி தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவின் மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவியாளர், கூடுதல் இழப்பீடு இல்லாமல் ஒரு மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்கிய பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும், நிரந்தர ஊழியரை பணிநீக்கம் செய்யும் போது, ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட சேவை ஆண்டுக்கும் சராசரி சம்பளத்தில் 15 நாட்களுக்கு சமமான இழப்பீட்டை முதலாளிகள் வழங்க வேண்டும்.
எனவே மனுதாரர், 480 நாட்கள் பணியாற்றியதால், அவர் நிரந்தர ஊழியராக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |